Monday, May 25, 2009

மே -21

தவறு செய்தது நாங்கள் என்றால்
அது தவறு அல்ல தண்டனை
தவறி நாங்கள் செய்யவில்லை என்றால்
ஒத்துகொள்கிறோம்
தவறு எங்களுடையது தான் தண்டனையை
நாங்கள் அல்லவா கொடுத்திருக்கவேண்டும்
ஆம் ! அது தவறு அல்ல தண்டனை.
நாங்கள் செய்திருந்தால் ?!

Wednesday, May 20, 2009

குட்டியை சிங்கத்திடம் இருந்து மீட்க போராடும் புலியின் கதை

புள்ளி வைத்து விட்டால் போர் முடிந்துவிடும்
என்றன பூனைகள்

நாங்கள் நாடகம் ஆடி நடனம் நடத்தி
எழுகின்ற எழுச்சியை அடகுகிறோம்
என்றது கிழட்டு நரி

ஆமாம் ! ஆமாம் என்பது போல்
தலையாட்டி திட்டம் தீட்டி செயல்படுத்தின
வடகாட்டு கொழுத்த ஓநாய்கள்

நாங்கள் இருகிறோமென்று ஆயுதம் அனுப்பி
ஆதரவு தெரிவித்தது வெளிக்காட்டு விலங்குகள்

இவை எல்லாம் போதாது என்று
சில புலிகள் நரியாக மாறியதால் தற்காலிக
வெற்றியில் கர்ச்சித்தன சிங்கங்கள்

பயந்துபோய் போய் புலம்பெயர்ந்தன சில
பறவைகள் அகதிகளாய்


பாவம் எதிர்த்து அடிக்கவும் இயலாமல்
உணர்ச்சியை அடக்கவும் இயலாமல் தவித்தன
ஓநாயின் அடிமை எருமைகள்

என்ன நடந்தாலும்
உடல் தமிழ் மண்ணிற்கு உயிர் தமிழ் இனத்திறுக்கு
இதை உரக்க சொல்லுகிறோம் உலகிற்கு
என்ற உறுமலுடன்
குட்டிகளை மீட்க வழிகள் தேடின
புலிகள் மட்டும் காட்டிற்குள் .


நான் தூங்க கதை சொன்ன என் அம்மா தூங்கிவிட்டால் கதையை முடிக்காமலே
நான் விடியலுக்காக காத்திருந்தேன் புலிக்குட்டிகள் மீட்கப்படுமா என்ற கவலையுடன்

ஏனோ அந்த இரவு மட்டும் எனக்கு விடியவில்லை இன்றுவரை !


. புள்ளி வைத்தால் எல்லாம் முடிந்துவிடும் என்று இல்லை
, கமாவின் தொடக்கமும் புள்ளியில் தான் ஆரம்பிக்கும் இது முற்றும் இல்லை தொடரும் ............. ,


ஒரு நாள் விடியவைப்போம் .

Tuesday, April 21, 2009

மவுனமும் மிகப்பெரிய தவறுதான் !

மவுனமும் மிகப்பெரிய தவறுதான் !
தவறி தவறு நான் செய்தேன்
தண்டனை என் ஒட்டுமொத்த இனத்திற்கு

எப்படி அந்ததவறுக்கு பரிகாரம் செய்வேன்
சிதறுண்ட உடல்களை தேடி புதைத்தா இல்லை
ஈழத்தில் ஓடும் குருதியில்
என்கறைபட்ட கைகளை கழுவியா
ஒன்றும் விளங்கவில்லை

ஒன்றுமட்டும் விளங்குகிறது
கடைசிவரை மனிதனாக மாறாமல்
மவுனமாகவே இருந்துவிடுவேனோ என்று !

Thursday, April 16, 2009

எதுவும் இல்லை !

எங்களிடம் இப்பொழுது எதுவும் இல்லையாம் ?!
ஆம் உண்மைதான்
இனியும் இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை
இனி இழந்துவிடுவோமோ என்றபயமும் இல்லை .
ஆனால் இழந்ததை மீட்டெடுக்கும் தைரியமும்
மீண்டும் பெறுவதற்கு எறாலமும் இருக்கிறது

படைநடத்தி வெல்ல வழி இல்லாத சிங்கள பேடிகள்
நச்சு புகைவீசி எங்களின் தலைமைகளையும்
தளிர்களையும் சாய்த்தது.

ஒருசேர
பன்னிரண்டு இழந்தபோதே பதறவில்லை
ஐந்து போனதற்கு அஞ்சிவிடுவோமா என்ன ?


தலைமைகளைதான் இழந்தோமேதவிர
தலைவனையும் தைரியத்தையும்
இழக்கவில்லை நாங்கள் .

கடைசி தமிழன் உள்ளவரை
தமிழீழ படை நடத்தி
வீரத்தால் பாடம் புகட்டுவோம் .

பொறுத்திரு திமிறி எழுந்து
திருப்பி அடிப்போம் !

முல்லைத்தீவும் ,கிளிநொச்சியும்,வன்னியையும்
அன்று இழந்த யாழ்ப்பாணத்தையும்
ஏன் உன் தலைநகரையும் சேர்த்து
மீட்டெடுக்கும் வீரம் எம்மிடம் உண்டு .

உன்னைப்போல் உலகநாடுகளிடம்
ஓடி ஓடி பிச்சைஎடுக்கும்
பேடிகள் அல்ல நாங்கள்

எதுவும் இல்லை ! ஆம்
இன்றுபோல் எதுவும் நிலையாக
இருந்துவிடபோவதும் இல்லை

Tuesday, January 13, 2009

தை பிறந்தால் வழி பிறக்கும்

"தை பிறந்தால் வழி பிறக்கும்"
என்று சொல்லுவார்கள் ஆனால்
என் தமிழனுக்கு மட்டும்
ஒவ்வொரு வழியாய் அடைக்கப்படுகிறது.
அன்று யாழ்பாணம் பிறகு
வஞ்சகனின் சூழ்ச்சியால் வன்னி.
அண்டை நாட்டின் ஆதரவில் கிளிநொச்சி.
இன்று ஆனையிறவும் அடைத்தாகிவிட்டது
மிஞ்சி இருப்பது முல்லைத்தீவும்,
எம்மவர்களின் நம்பிக்கையும் மட்டும் தான் .
கடைசி தமிழன் இருக்கும் வரை
வழிகளை உருவாக்கி கொண்டே இருப்போம்.
உம்மை அண்டி அடங்கி அடிமை வாழ்கை
வாழ்வோம் என்று கனவுகானதே.